500. கிளிநொச்சி வீழ்ச்சியும் காங்கிரஸ் காமெடியும்
இது எனது 500வது ஸ்பெஷல் இடுகை! அட்வான்ஸ் வாழ்த்து சொன்ன செந்தழல் ரவிக்கு நன்றி :-)
2 தினங்களுக்கு முன் கிளிநொச்சியை இலங்கை ராணுவம் கைப்பற்றியது. விடுதலைப்புலிகள் பெருமளவில் எதிர்ப்பு தெரிவிக்காமல் பின்வாங்கி விட்டது இதற்கு ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. புலிகள், கிழக்குப் பக்கம் தங்கள் இருப்பை வலுப்படுத்த நகர்ந்து விட்டதாகத் தெரிகிறது. முல்லைத்தீவு, யானையிறவு ஆகிய பகுதிகளை நோக்கி இலங்கை ராணுவம் முன்னேறி வரும் சூழலில், புலிகள் தங்கள் போர் யுக்திகளை மாற்றி அமைக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.
இது ஒரு ஒப்பிட முடியாத பெரும்வெற்றி (செப் 1998க்கு பிறகு ராணுவம் மீண்டும் கிளிநொச்சியைக் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது!) என்று கூறியுள்ள ராஜபக்க்ஷே, பெரிய மகாத்மா காந்தி மாதிரி "இந்த வெற்றியை ஒரு இனத்தவர் மீதான இன்னொரு இனத்தவரின் வெற்றியாகப் பார்க்கவே கூடாது" என்று பிதற்றியிருப்பது நகைச்சுவை !
கி.நொச்சியை கைப்பற்றியது ஒரு புறமிருக்கட்டும். அதைத் தக்க வைத்துக் கொள்வதற்கு இலங்கை ராணுவம் மிகவும் பிரயத்தனப்பட வேண்டும். 1998-இல் கூட, கைப்பற்றிய சில மாதங்களிலேயே புலிகள் இலங்கை ராணுவத்தை விரட்டி அடித்தனர்.(சிறிய அளவிலானது என்று சொல்லப்படும்!) இப்போரில், புலிகள், பொதுமக்கள், ராணுவத்தினர் என்று உயிரழப்பு மிக மிக அதிகம் என்று தான் சொல்ல வேண்டும்.
புலிகள் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று சொன்னாலும், போர் வெற்றிகள் ஏற்படுத்திய போதையில் மிதந்து கொண்டிருக்கும் ராஜபக்க்ஷே அதை ஏற்கும் மனநிலையில் இல்லை!
போர் நிறுத்தப்பட்டு, பேச்சுவார்த்தைக்கு ஏற்ற ஒரு சுமுகமான நிலைமை ஏற்பட இந்தியா எதுவும் செய்ய விரும்பவில்லை (செய்யாது!) என்பது கண்கூடு. திராவிடக் கட்சிகளால் (முக்கியமாக ஆட்சியில் இருக்கும் தி.மு.க), மத்திய அரசை வற்புறுத்தி எதுவும் செய்ய வைக்க முடியாது என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று தான்!!! இந்தியா தலையிட்டு ஏதாவது நல்லது நடக்க வேண்டும் என்று எண்ணுபவர்களில் நானும் ஒருவன்!
இவ்விசயத்தில் தி.மு.க அரசின் (அடிக்கடி மாறும்) கேலிக்கூத்தான நிலைப்பாடுகள் பற்றிப் பேசி பயன் எதுவும் இல்லை! விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க போன்ற கட்சிகள் (சற்றே உண்மையான அக்கறையில்) கூச்சல் போட்டாலும், மத்திய அரசு அவர்களை துளியும் மதிக்கப் போவது இல்லை.
தி.மு.க, தனது மத்திய அமைச்சர்கள் பதவி விலகுவது என்று ஒரு முடிவு எடுத்தால் கூட (பொதுத் தேர்தல் விரைவில் வரவிருக்கும் சூழலில்) அது பெரிய இழப்பு கூட கிடையாது. ஆனால், மாநிலத்தில் காங்கிரஸ் ஆதரவு வாபஸ் பெறப்பட்டால், இங்கு தி.மு.க ஆட்சி கவிழ்ந்து விடும் அபாயம் இருக்கிறது.
ஈழத்தமிழர் பாவம் தான்! அதற்காக ஆட்சியைத் தியாகம் செய்ய முடியுமா, சொல்லுங்கள் ?!?!
இதற்குப் பேசாமல், ஜெ, சு.சுவாமி போல இலங்கைப் போரை ஆதரித்து விட்டுப் போய் விடுவது நேர்மையான அணுகுமுறையாக இருக்கும்!!!
மத்திய அரசு ஈழப்பிரச்சினையில் எடுத்திருக்கும் நிலைப்பாடு குறித்து ஆச்சரியம் படத் தேவையில்லை. மலேசிய அரசு தமிழர்களை அடக்கி ஒடுக்கியபோதும் (அங்கு தமிழர்கள் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோதும்!) மத்திய/மாநில அரசுகள் பெரிதாக எதுவும் செய்யவில்லை! அது போலவே, பிஜியில் பிரச்சினை வந்தபோதும், இந்தியா ஒன்றும் செய்யவில்லை. "வாய்ச்சொல்லில் வீரனடி" என்ற பட்டம் (வல்லரசாக கனவு காணும்!) நமக்கு மிகவும் பொருந்தும்!
இந்த லட்சணத்தில், இந்த அவலச்சூழலில், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு (பிரபாகரனை உயிருடன் பிடித்தால்!) அவரை தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி (வீரப்ப மொய்லி) இலங்கையிடம் கேட்டிருப்பதைப் பார்த்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை?!?!
பாகிஸ்தானிலிருந்து வந்த 10 தீவிரவாதிகள் நம் மக்கள் 200 பேரை துளியும் இரக்கமின்றிக் கொன்றும், பாகிஸ்தானை எதுவும் செய்ய வழிவகை அறியாமல், என்றொ நடந்த ஒன்றை வைத்துக் கொண்டு காங்கிரஸ் கட்சி இப்படி உளறுவதும், செயல்படுவதும் கேவலமாக இருக்கிறது.
மன்மோகம் சிங், மும்பை பயங்கரத்தில் தொடர்புடைய தீவிரவாதிகளை ஒப்படைக்கும்படி தினம் ஒரு கடிதம் பாகிஸ்தானுக்கு எழுதிக் கொண்டிருப்பது நல்ல காமெடி, ஏனெனில், அக்கடிதங்களை வாசித்து விட்டு பாக். சிரிப்பதால்!
இன்னொரு விசயத்தையும் கவனிக்க வேண்டும். தமிழ்நாட்டில், பல ஆண்டுகளாகவே, திமுக அல்லது அதிமுக என்று ஏதோ ஒரு கட்சியோடு கூட்டு வைத்தே காங்கிரஸ் பெரும்பாலும் தேர்தலைச் சந்தித்துள்ளது. தனியாக எதுவும் சாதிக்க முடியாத நிலையில், மாநிலத்தில் "காமராஜர்" ஆட்சி என்பது கனவு தான்! அதனால் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு Political stakes குறைவே, எதிர்பார்ப்புகளும் குறைவே. எப்படியும் தேர்தலின்போது, 2 பெரிய கட்சிகளில் ஒன்றுடன் கூட்டணி அமைத்து விட முடியும் என்ற சந்தர்ப்பவாதம் மட்டுமே காங்கிரஸை செலுத்தி வருகிறது, தமிழ்நாடு சார்ந்த எல்லா பிரச்சினைகளிலும்! இது தான் நடைமுறை!
மூன்றாவது வலுவான அணி ஒன்றில் காங்கிரஸ் தலைமை ஏற்கும் சூழலில் மட்டுமே (அதாவது மாநிலத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் ஆட்சி அமைய வாய்ப்பு இருக்கும் ஒரு நிலையில் மட்டுமே!) தில்லியிலுள்ள காங்கிரஸ் தலைமை வேறு மாதிரி சிந்திக்கத் தொடங்கும்! மாநில காங்கிரஸில் நிலவும் உட்பூசலில் இதெல்லாம் இந்த ஜென்மத்தில் நடக்கும் வாய்ப்பில்லை :-)
எ.அ.பாலா
23 மறுமொழிகள்:
Congratulate BALA for 500 Not Out ;-)
;-)நன்றி
500 வதுக்கும் நன்றி
//கிளிநொச்சி//
வாழ்த்துகள் பாலா.
தமிழகத்தில் காங்கிரசாரின் ஐயோ பாவம் நிலைக்கு அக்கட்சிதான் காரணம். அதுவும் சமீபத்தில் 1971-ல் அன்னை மாதா தாயார் இந்திரா காந்தி சில எம்.பி. சீட்டுகளுக்காக மாநில சட்டசபையில் ஒரு சீட்டுக்கு கூட போடியிட முடியாத நிலையை ஏற்றார். அதன் விளவை இன்னும் யாராலும் தீர்க்க இயலவில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி
500 வதுக்கு வாழ்த்துக்கள்...!
கி.நொச்சியை கைப்பற்றியது ஒரு புறமிருக்கட்டும். அதைத் தக்க வைத்துக் கொள்வதற்கு இலங்கை ராணுவம் மிகவும் பிரயத்தனப்பட வேண்டும். -பாலா
இலங்கை ராணுவம் அப்படி பிரயத்தனப்பட வேண்டிய தேவையில்லை.காரணம் புலிகள் திட்டமிட்டுத் தங்களின் ஒட்டு மொத்தக் கட்டமைப்புகளையும் வேறு இடங்களுக்கு நகர்த்தி விட்டு மிக சாவகாசமாக கிளிநொச்சியை விட்டு பத்திரமாக வெளியேறியதாக புலிதரப்பால் அறிவிக்கபட்டுள்ளது. புலிகளினால் கிளிநொச்சி ராணுவத்திற்கு பரிசளிக்கப்பட்டுள்ளது.
வாழ்த்துகள்
பதிவுக்கும்
புரிந்துணர்வுக்கும் பதிவுக்கும் நன்றி
அழுதும் அவள்தான் பிள்ளை பெறவேண்டும் என்பது போல்
எவர் வந்தால் என்ன வராவிட்டால் என்ன ஈழத்தவர்தான் தமது விடுதலையை பெறவேண்டும்.
வன்னியிலிருந்து எம் கவிஞன் புதுவை குரல் கேட்கலையோ?
திரு.அத்வானி தேர்தலில் வெற்றிபெற்று பிரதமராவது மட்டுமே இந்தியா உருப்பட ஒரே வழி...
ஆட்சிக்கு வந்தால் ஹிந்துத்துவ கொள்கைகளை ஓரமாக வைத்துவிட்டால் மட்டும் போதும்...
இந்தியாவை இந்த நூற்றாண்டில் வழிநடத்தப்போகும் ஒரே தலைமை அத்வானிதான்...
ராகுலிடம் இருக்கும் தலைமைப்பண்பு டவுட் !!!
500 க்கு வாழ்த்துக்கள் பாலா!
500 க்கு வாழ்த்துகள்.
இலங்கை பிரச்சினைக்கு இந்தியா மட்டுமே தீர்வு காணமுடியும்.
அரை ஆயிரம், ஐந்து நூறு ஆஹா ஆஹா....
இனிய பாராட்டுகள் பாலா.
இது விரைவில் முழு ஆயிரமாக வளர வாழ்த்துகின்றேன்.
என்றும் அன்புடன்,
துளசி
500வது பதிவுக்கு வாழ்த்துகள்
நன்றியும், வாழ்த்துகளும்.
தமிழகக் கட்சிகளைப் பற்றிய உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன். காங்கிரஸின் நகைச்சுவைக்கப்பால் ஒரு உண்மையிருக்கிறது. அதைச் சுட்டிக் காட்டவே இதை எழுதுகிறேன்.
//மத்திய அரசு ஈழப்பிரச்சினையில் எடுத்திருக்கும் நிலைப்பாடு குறித்து ஆச்சரியம் படத் தேவையில்லை. மலேசிய அரசு தமிழர்களை அடக்கி ஒடுக்கியபோதும் (அங்கு தமிழர்கள் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோதும்!) மத்திய/மாநில அரசுகள் பெரிதாக எதுவும் செய்யவில்லை! அது போலவே, பிஜியில் பிரச்சினை வந்தபோதும், இந்தியா ஒன்றும் செய்யவில்லை. "வாய்ச்சொல்லில் வீரனடி" என்ற பட்டம் (வல்லரசாக கனவு காணும்!) நமக்கு மிகவும் பொருந்தும்!//
இந்திய அரசை வெறும் கையாலாகாத அரசாக நான் பார்க்கவில்லை. மலேசியா, பிஜி போன்றவற்றில் இந்தியாவின் தலையிடாமையை வேண்டுமானால் கையாலாகாத்தனம் என்று சொல்லலாம். இலங்கை விசயத்தில் அப்படியில்லை. தமிழர்களை எதிரிகளாகப் பாவிக்கிறது இந்திய அரசு.
ஈழப்பிரச்னையில் இன்று தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசுக்கு இராணுவ உதவி செய்வதாகட்டும், புலிகள் இயக்கத்தை அழிப்பதற்கு சகல ரா வசதிகளை வழங்குவதாகட்டும் இந்தியா வேண்டுமென்றேதான் செய்து வருகிறது. அதே போல் அன்று இந்திய உளவு நிறுவனங்கள் போராளி இயக்கங்களுக்குள் சண்டை உண்டு பண்ணியதாகட்டும், இராணுவத்தை அனுப்பி புலிகளுடன் போராடியதாகட்டும் இராஜீவின் முட்டாள்தனமென்றுதான் என்னைப் போன்றவர்கள் கூட நம்பினோம். ஆனால் தமிழர்களுக்கு (ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல இந்தியத்தமிழர்களும் கூட) இன்று வெட்ட வெளிச்சமாக புலப்படும் உண்மை இதுதான்.
புலிகள் இயக்கம் அல்ல இந்தியா சொல்லுகிற இடத்தில் கையெழுத்துப் போடக்கூடிய எந்த இயக்கமானாலும் கூட தமிழர்களுடைய சுயநிர்ணய உரிமைக்கு எதிரானது இந்தியா. ஒருவேளை ஆனந்தசங்கரியை இராஜபக்சே அழைத்து தமிழர்களுக்கு ஒரு துண்டு நாட்டைக் கொடுத்துத் தொலைந்து போங்கள் என்று சொன்னால் கூட அதற்கு எதிராக இந்தியா இருக்கும். இதுதான் நிதர்சனமான உண்மை.
எனவே கருணாநிதியும் திராவிடக் கட்சிகளும் செய்வது கேலிக் கூத்தாக இருக்கலாம். ஆனால் இந்தியா செய்வது நிச்சயம் கையாலாகாத்தனமல்ல. வரலாற்று ரீதியான பச்சை ஆதிக்கவெறி. தமிழ்நாடு காங்கிரஸ் காரன்கள் இந்த ஆதிக்கவெறியின் பகடைக்காய்கள்தான்.
நன்றி - சொ.சங்கரபாண்டி
//"இந்த வெற்றியை ஒரு இனத்தவர் மீதான இன்னொரு இனத்தவரின் வெற்றியாகப் பார்க்கவே கூடாது"//
:)
மருந்து குடிக்கும் போது குரங்கை நினைக்காதே பாணியாக சொல்கிறார் போலும்.
வெற்றிகளோ, தோல்விகளோ அவை காலத்தின் கட்டாயம் தான், நிரந்தரம் எதுவுமில்லை
500 ஆவது பதிவுக்கு வாழ்த்துகள் !
My best wishes :))
Thanks for this post.
//புலிகள் இயக்கம் அல்ல இந்தியா சொல்லுகிற இடத்தில் கையெழுத்துப் போடக்கூடிய எந்த இயக்கமானாலும் கூட தமிழர்களுடைய சுயநிர்ணய உரிமைக்கு எதிரானது இந்தியா. ஒருவேளை ஆனந்தசங்கரியை இராஜபக்சே அழைத்து தமிழர்களுக்கு ஒரு துண்டு நாட்டைக் கொடுத்துத் தொலைந்து போங்கள் என்று சொன்னால் கூட அதற்கு எதிராக இந்தியா இருக்கும். இதுதான் நிதர்சனமான உண்மை.//
Absolutely right!
500 பதிவுகள் எழுதி சாதனை புரிந்த பாலாவுக்கு பாராட்டுக்கள்.
விரைவில் ஆயிரம் பதிவுகளும் அதற்கும் மேலும் எழுதி சாதனை புரியவும் வாழ்த்துக்கள்.
Bala
500 க்கு வாழ்த்துக்கள்
500 பதிவுகளுக்கு வாழ்த்துகள் பாலா! நெசமாவே நின்னு ஆடறீங்க :)
ஆனால் 500 Test Commentகளுக்கு வாழ்த்து சொல்ல மாட்டேன் ;)
500 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் பாலா!
நண்பர்கள்,
கானாபிரபா,ராகவன் சார், நிமல், அனானிஸ், திகழ்மிளீர், டாக்டர் புருனோ, செ.ரவி, அபி அப்பா, குடுகுடுப்பை, துளசி அக்கா, மின்னல், சங்கரபாண்டி, கோவி.கண்ணன், பொட்டிக்கடை, சங்கர், மஞ்சூர் ராசா, இளவஞ்சி, நாமக்கல் சிபி,
மிக்க நன்றி, வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துகளுக்கும்,
பி.கு: யார் பெயரையும் விடவில்லை என்று நினைக்கிறேன் :-)
//ஒருவேளை ஆனந்தசங்கரியை இராஜபக்சே அழைத்து தமிழர்களுக்கு ஒரு துண்டு நாட்டைக் கொடுத்துத் தொலைந்து போங்கள் என்று சொன்னால் கூட அதற்கு எதிராக இந்தியா இருக்கும்.//
//இந்தியா செய்வது நிச்சயம் கையாலாகாத்தனமல்ல. வரலாற்று ரீதியான பச்சை ஆதிக்கவெறி. தமிழ்நாடு காங்கிரஸ் காரன்கள் இந்த ஆதிக்கவெறியின் பகடைக்காய்கள்தான்.//
சங்கரபாண்டி,
நீங்கள் சொன்னவை தான் ஈழத்தமிழர்களின் போராட்டத்தில் இந்திய நிலைபாடு. காங்கிரஸ் ஆட்சி மாறி வேறு காட்சி ஆட்சியமைத்தாலும் ஈழத்திற்கு எதிரான இந்திய நிலைபாடு மாறாது. ஈழத்தின் விடியலுக்கு இந்தியாவை நம்புவதில் எந்த பலனுமில்லை.
Post a Comment